த உரிமை மீறல்கள் உச்சம் பெற்றுள்ளமை காரணமாக அந்த நாட்டுக்கான அனைத்துவிதமான நேரடி உதவிகளையும் கனேடிய அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
அந்த நாட்டின் ஓய்வூதிய முறையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கே ஏற்பட்ட பேரணிகளை ஜனாதிபதி டானியல் ஓர்டேகா தலைமையிலான அரசு வன்முறை கொண்டு அடக்கியது.
அதனை அடுத்து அந்த நாட்டு ஜனாதிபதி டானியல் ஓர்டேகாவை பதவி விலகுமாறு கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.
இந்த அரச எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில், 640க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்து.
இருந்த போதிலும், மிகவும் குறைவானோரே கைது செய்யப்பட்டதாகவும், பலரும் அண்மைய மாதங்களில் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் அந்த நாட்டு அரசு கூறிவருகிறது.
இவ்வாறான நிலையில், அந்த நாட்டுக்கான அனைத்துவித நேரடி உதவிகளையும் நிறுத்தும் முடிவினை கனேடிய அரசாங்கம் ஏற்கனவே எடுத்துவிட்டதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் உறுத்திப்படுத்தியுள்ளார்.
எனினும் பாதிக்கப்படுவோருக்கான உதவிகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.