நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை மன்னிப்புச் சபை ஆட்சேபித்துள்ளது.
அத்தோடு மரண தண்டனையை அமுல்படுத்துவதன் ஊடாக சர்வதேச மனித உரிமைச்சட்டங்கள் மீறப்படுதல், மரண தண்டனை குற்றங்கள் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்தாமை, தவறான தீர்ப்புக்களால் மரண தண்டனைக்கு உள்ளாகின்ற சந்தர்ப்பங்களில் தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் மீளவும் அதனை மாற்றியமைக்கும் வாய்ப்புக்கள் இல்லாமை என்பன குறித்தும் சபை கோடிட்டுள்ளது.
மேலும், சிறுபான்மையினர், வலுவான சமூக, பொருளாதாரப் பின்னணி அற்றவர்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.