இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நால்வரில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.
ட்ரக் வண்டியொன்றும், ரக்ரரொன்றும், பயணிகள் வாகனமொன்றும் ஒன்றுடனொன்று மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விபத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகளை ஒன்ராறியோ மாகாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.