தனது இராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அவர், அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் கட்சியில் தான் வகித்த அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக ட்விட்டர் கணக்கிலுள்ள தனது கட்சி சார்ந்த அறிமுகங்களையும் அவர் மாற்றிக்கொண்டார்.
மேலும் விலகுவதற்கு முன்னர், தான் கட்சியில் வகித்த பதவிகள் குறித்த விவரங்களையும் அவர் அதில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், பிரியங்கா சதுர்வேதி தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உத்தர பிரதேசத்தில் அண்மையில் இடை நீக்கம் செய்ப்பட்ட சில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏப்ரல் 15 ஆம் திகதி மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.