இந்நிலையில் அவரை வரவேற்கும் முகமாக ஆதரவாளர்களால் பல்வேறு நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு அவரை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறு விஜத்கம என்ற அமைப்பு ஆதரவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது தமிழரான றோய் சமாதானம் என்பவர் சார்பாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு மற்றும் அமெரிக்க சட்ட நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படுகொலைச் செய்யப்பட்ட, சண்டே லீடர் பத்திரிகை பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்கவினால் சிவில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கு இரட்டை குடியுரிமை சிக்கல் இருப்பதால், அமெரிக்க குடியுரிமையை கோட்டா கைவிடுவது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கடந்த நாட்களில் அவருக்கு எதிராக இருவேறு வழக்குக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த வேட்பாளர் பிரச்சினையில் மொட்டு கட்சி சிக்கிதவித்து வருகின்றது.
இவ்வாறு தென்னிலங்கை அரசியல் பரபரப்படைந்துள்ள நிலையில் நாளை கோட்டா நாடு திரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது.