ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி தொடர்பாக இம்மாதம் 10ஆம் திகதி தீர்க்கமான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
அந்த கலந்துரையாடலின் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.
அத்துடன் இம் முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தினை கம்பஹா மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் 5ஆம் திகதியின் பின்னர் முன்னெடுக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண மற்றும் பிரசார செயலாளர் ரஞ்சித் சியம்பலாப் பிட்டிய ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.