இந்த விபத்துச் சம்பவம் இன்று மாலை 4.15 மணியளவில் உரும்பிராய் இலங்கை வங்கிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியொன்றும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒன்றுடன் ஒன்று, நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் படுகாயங்களுக்கு உள்ளான இருவர் வீதியில் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.