முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டு சித்திரவதையில் இருந்து உயிர்பிழைத்த தமிழர் ஒருவரின் சார்பில் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான அமைப்பு மற்றும் அமெரிக்க சட்ட நிறுவனத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு படுகொலைச் செய்யப்பட்ட, சண்டே லீடர் பத்திரிகை பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்கவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, சிவில் வழக்கொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆதவன் செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலே இதனை பேராசிரியர் குறிப்பிட்டிருந்தார்.