LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, April 17, 2019

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் இரத்து – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிகளவி
ல் பணம் கைப்பற்றதையடுத்து தேர்தல் ஆணையம் அந்த தொகுதிக்கான தேர்தலை இரத்துச் செய்துள்ளது.

பணம் கைப்பற்றலைத் தொடர்ந்து ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையகம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை இரத்துச் செய்துள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அ.ம.மு.க. சார்பில் பாண்டுரங்கன், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் சுரேஷ் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் 29, 30ஆம் திகதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 இலட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

அதற்கு இரண்டு நாள் கழித்து ஏப்ரல் 1 மற்றும் 2ஆம் திகதி துரைமுருகனுக்கு நெருங்கிய உறவினரும் தி.மு.க. பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீட்டின் களஞ்சிய அறையில் நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.11 கோடியே 48 இலட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்தது என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், உறவினர் பூஞ்சாலை சீனிவாசன், தாமோதரன் உள்ளிட்டோர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

நேரடியாக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் ஏனைய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் இரத்து செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. வருமான வரித்துறை சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையளித்தனர்.

வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் அதிகாரியின் அறிக்கை, வருமான வரித்துறை அறிக்கை, பொலிஸார் வழக்குப் பதிவு உள்ளிட்ட அம்சங்களை வைத்து இன்று தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனையின் முடிவில் தேர்தலை இரத்துச்செய்ய முடிவெடுத்து அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்த நிலையில் தேர்தலை இரத்துச் செய்வதாக தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரிக்கு தகவல் அனுப்பியுள்ளது.

எனினும் குடியாத்தம் (தனி), ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவித்தபடி ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7