ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (திங்கட்கிழமை) விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது திருப்திகரமான, வினைத்திறனான மக்கள் சேவையை வழங்கக்கூடிய பொலிஸ் சேவையை ஸ்தாபித்தல், கீழ்மட்டத்தில் உள்ள உத்தியோகஸ்தர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவது குறித்து விசேட வேலை திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் குறித்தும் அதன் முன்னேற்றம் குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.