இயந்திரங்களில் கூட, எமது சின்னத்தை தெளிவாக பதிவிடவில்லையென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்திந்த சீமான் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“எங்களது வளர்ச்சியை தடுக்க வாக்குப்பதிவு இயந்திரங்களில் கூட எமது சின்னத்தை மங்கலாக்கி விட்டனர். ஆனால் சுயேச்சை சின்னம் கூட மிகவும் தெளிவாக தெரிகின்றது.
நாட்டை காக்க வேண்டுமென்கின்ற ஒரே குறிகோளில் செயற்படும் எங்களைப் போன்ற கட்சிகள் வளர்ந்துவிடக்கூடாதென்றே முக்கிய சில கட்சிகள் நினைக்கின்றன.
இவற்றையெல்லாம் கடந்தே நாம் மேலெழுந்து மக்களுக்காக தொடர்ந்து போராடுகின்றோம்” என சீமான் தெரிவித்துள்ளார்.