நாளை(திங்கட்கிழமை) காலை இந்த பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேரரசர் அக்கிஹிட்டோ அரியணை ஏறியதிலிருந்து இதுவரையுள்ள 31 ஆண்டு காலம், ஹெய்ஷி யுகம் என்றழைக்கப்பட்டது.
அது அவர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30திகதி தேதி அவர் அரியணையைத் துறக்கும்போது அந்த யுகம் முடிவுக்கு வரவுள்ளது.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி, பட்டத்து இளவரசர் நொருஹிட்டோ ஜப்பானின் புதிய பேரரசராக முடிசூட்டிக்கொள்ளவுள்ளார்.
இந்தநிலையில் அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் புதிய – யுகத்தின் பெயர் அறிவிக்கப்படுவது ஜப்பானிய வழக்கம்.
7ஆம் நூற்றாண்டிலிருந்து இதுவரை ஜப்பானில் சுமார் 250-யுகங்கள் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.