தீவிரவாதத்தை ஒழிப்பதற்காகவே அமெரிக்காவும் போராடுகின்றது என குறிப்பிட்ட அவர், இலங்கையுடன் இணைந்து இதற்கான நடவடிக்கையை முன்னெடுப்போம் என கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக வொஷிங்டனில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்று காலை இலங்கை பிரதமர் மற்றும் கொழும்பிவுள்ள அமெரிக்க தூதரகத்தை தொடர்புகொண்டதாக குறிப்பிட்ட அவர், தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
சுமார் 80 நாடுகள் இன்று ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளதாக குறிப்பிட்ட பொம்பியோ, இது பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றதென குறிப்பிட்டார்.
இந்நிலையில், உலகளாவிய ரீதியில் இந்த அச்சுறுத்தலை முறியடிப்பது அவசியமென பொம்பியோ மேலும் குறிப்பிட்டார்.