ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்விடயம் குறித்து இலங்கைக்கு மீண்டும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
“பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து, ரோமேனியா, நோர்வே மற்றும் சுவிட்ஸலாந்தின் தூதுவராலயம், அவுஸ்ரேலியா, கனடா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றின் இணக்கப்பாட்டுக்கு அமையவே இந்த அறிவித்தலை மீண்டும் வெளியிட்டுள்ளோம்.
அந்தவகையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 43 வருடங்களின் பின்னரே இலங்கையில் மரணத் தண்டனையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். இதற்காக மரணத் தண்டனையை அமுல்படுத்த முனைவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் போதைப்பொருள் கடத்தலை, தடுப்பது குறித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கும் தயாராக உள்ளோம்” என அவ்வறிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.