இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ‘கியூபெக்கைச் சேர்ந்த Edith Blais, இத்தாலியைச் சேர்ந்த Luca Tacchetoவுடன் கடந்த டிசம்பர் மாதம் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள Burkina Faso ற்கு சுற்றுலா சென்ற இடத்தில் மாயமானார்.
இதுகுறித்து ஜனவரி மாதம் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, Edith உயிருடன் இருப்பார் என நம்புவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, Edith Blaisவும் அவரது சக சுற்றுலாப்பயணியும் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எந்த தீவிரவாத அமைப்பும் இந்த கடத்தலிற்கு பொறுப்பேற்காத நிலையில், Edith Blais அவரது சக சுற்றுலாப்பயணியும் கடத்தப்பட்டு மாலிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.