முன்னிலையில் அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் புத்தளம் சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் நாளை (திங்கட்கிழமை) கைப்பற்றப்பட்ட 769 கிலோகிராம் போதைப்பொருளை அழித்து எரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த அழிப்பு நடவடிக்கையின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியைக் காண அனுமதிக்கப்படுவார்கள் என போதைப்பொருள் அழிப்பு பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் சமந்த குமார கிதளவ ஆராச்சி தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை அழிப்பது என்பது இரண்டாவது முறையாகும். இதற்க்கு முன்னர் கடந்த வருடம் 1,000 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.