உலகமெங்கும் நாளை (வெள்ளிக்கிழமை) பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், சீனாவில் சில தினங்களுக்கு முன்பே வெளியிாகியுள்ளது.
இத்திரைப்படம் அங்கு ப்ரீமியர் காட்சிகள் மற்றும் முதல் நாள் சேர்த்து 107 மில்லியன் டொலர் வசூலை தாண்டியுள்ளது. இந்திய மதிப்பில் இப்படம் 750 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.
சீனாவில் இதுவரை வந்த ஹொலிவுட் படங்களின் முதல் நாள் வசூல் சாதனை அனைத்தையும் இப்படம் முறியடித்துள்ளது. எனினும் சீனாவில் மட்டுமே இப்படம் 1 பில்லியன் டொலர் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் மார்வெல் சீரியலில் இடம்பெற்றிருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இணைந்துள்ள கடைசி பாகம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மார்வெல்லுக்கான பாடலை உருவாக்கி இருந்தார்.
விஜய்சேதுபதி இப்படத்தில் அயன் மேனுக்கு தமிழில் குரல் கொடுத்துள்ளார். அதுபோன்று, பிளாக் விடோவிற்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளார். தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதியுள்ளார்.
இத்திரைப்படத்தில் அயன் மேன், தோர், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், ஸ்பைடர்-மேன் என பல அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோக்கள் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.