திருமணத்துக்கு சென்றவர்களை ஏற்றிவந்த வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் இரு குழந்தைகள், ஆறு பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் சில நாட்களாக கனமழைபெய்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லையை ஒட்டியுள்ள வசிரிஸ்தான் மாவட்டத்தில் சிலர் ஒரு வாகனத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றனர்.
வானா என்ற இடத்தின் வழியாக சென்றபோது சாலையின் குறுக்கே பாய்ந்த வெள்ளத்தில் அந்த வாகனம் அடித்துச்செல்லப்பட்டது.
அருகாமையில் உள்ளவர்கள் வழங்கிய தகவலையடுத்து விரைந்து வந்த மீட்புப் படையினர் தீவிரமாக செயற்பட்ட போதும் இரு குழந்தைகள் மற்றும் ஆறு பெண்கள் உயிரிழந்தனர். இதனிடையே காணாமற்போன 6 குழந்தைகளை மீட்பதற்கான தேடுதல் நடைபெற்று வருகிறது.