தோட்ட வேலைகளில் ஈடுபடும் பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வான் ஒன்று இன்று(திங்கட்கிழமை) காலை விபத்துக்குள்ளானதிலேயே இவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த வானின் ரயர் ஒன்று வெடித்து, குடைசாய்ந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.