இந்த போராட்டம் வவுனியாவில் 777ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால், போராட்ட களத்திற்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அமெரிக்காவிடம் உதவியைக் கோரி ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கையெழுத்துக்கள் சேகரிக்கக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் வேறு மாவட்டங்களுக்குச் சென்று மேலும் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கையெழுத்துக்களை பெற உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தனர். அதன்படி நாளை மறுதினம் வற்றாப்பளை கோயிலுக்கு முன்பாக இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது கூட்டமைப்பினர் தம்மை தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.