கடந்த 6 மாதங்களில் இந்தோனேசியாவிலும், எத்தியோபியாவிலும் விபத்துக்களில் சிக்கியதால் உலகின் பல விமான நிறுவனங்களும் போயிங் 737 மக்ஸ் ரக விமானங்களை ஈடுபடுத்துவதை முற்றாக நிறுத்திவைத்துள்ளது..
அமெரிக்காவின் டெக்சாஸைத் தலைமையிடமாகக் கொண்ட சவுத்வெஸ்ட் எயர்லைன்ஸ் நிறுவனம் ஏப்ரல் 20 முதல் அந்த ரக விமானங்களை இயக்கப் போவதில்லை என அறிவித்திருந்தது.
இந்நிலையில் அதற்கான கால எல்லையை மே மாதத்துக்கு அந்நிறுவனம் நீட்டித்துள்ளதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.