அதன்படி எதிர்வரும் நாட்களில் நாட்டின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளை புயல் தாக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆயிரக்கணக்கா மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையிலேயே இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களாக நீடித்துவரும் மழை வெள்ளத்தினால் சுமார் 45 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானின் 31 மாகாணங்களில் 23 மாகாணங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மீட்பு பணிகளை முன்னெடுப்பதற்கான ஹெலிகொப்டர்கள், ஆட்பலம் உள்ளிட்ட இராணுவ உதவிகளை ஈரான் அதிகாரிகள் கோரி நிற்கின்றனர்.