உலோக தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட வாயுகசிவின் காரணமாகவே இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
உடைந்த உலோகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியிலேயே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கடந்த 25ஆம் திகதி யான்செங் நகரிலுள்ள இரசாயன ஆலையொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 78 பேர் கொல்லப்பட்டனர். சம்பவம் இடம்பெற்ற 10 நாட்களுக்குள் இன்னொரு விபத்து பதிவாகியுள்ளது.
சீனாவில் தொழிற்சாலைகளில் இடம்பெறும் இவ்வாறான வெடிவிபத்துக்களில் வருடாந்தம் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இந்நிலையில், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதில் சீனா பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.