தேசிய குற்ற ஆவணக் காப்பகம், சிறைத்துறை தொடர்பாக நடத்திய ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் நடைபெற்றுவரும் குற்றங்களை உரிய முறையில் பதிவுசெய்து வரும் அமைப்பு தேசிய குற்ற ஆவண காப்பகமாகும். இந்த அமைப்பு பல்வேறு துறைகளில் ஆய்வுகள் நடத்தி புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில், சிறைக்கைதிகள் குறித்து காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதிலும் மொத்தம் ஆயிரத்து 400 சிறைகள் உள்ளன. இதில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை கிடைத்த தகவலின்படி 4.33 இலட்சம் கைதிகள் இருக்கின்றனர்.
இதில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 683 குற்றவாளிகளும், 2 இலட்சத்து 93 ஆயிரத்து 58 விசாரணைக் கைதிகளும், 3 ஆயிரத்து 89 பேர் தடுப்பு காவலிலும் உள்ளனர். இதன்மூலம், இந்திய சிறைகளில் உள்ள கைதிகளில் 67 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள் என தெரியவந்துள்ளது.
இதில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தான் அதிகளவில் விசாரணைக் கைதிகள் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், சிறைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ள பெண்கள் சிறையில் பிரசவித்த ஆயிரத்து 942 குழந்தைகளும் இந்த புள்ளிவிவரத்தில் அடங்கும்” என காப்பகம் குறிப்பிட்டுள்ளது.