LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, April 10, 2019

641 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மஞ்சந்தொடுவாய் யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலை அபிவிருத்திப் பணிகள் மிக விரைவில் பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவிப்பு

                                                                                      (முர்ஷீத்)
இன்று (09.04.2019 திங்கள்) சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், பொறியியலாளர் சிப்லி பாறுக் இடையிலான விசேட சந்திப்பு அமைச்சு அலுவலகத்தில் இடம் பெற்றது.

காத்தான்குடி, அதனை அண்டிய பிரதேசத்தின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவது சம்பந்தமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் மேற்படி சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.

அந்த வகையில் இன்று காத்தான்குடி யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலையின் 641 மில்லியன் பெறுமதியான அபிவிருத்திப் பணி சம்பந்தமாக கலந்துரையாடியது மாத்திரமல்லாமல் அந்த அபிவிருத்திப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொறியியலாளர் சிப்லி பாறூக் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமிடம் வேண்டுகோள் விடுத்தார்.

641 மில்லியன் பெறுமதியான அபிவிருத்திப் பணிகளை 3 கட்டங்களாக இவ்வாண்டிலிருந்து 03 ஆண்டுகளுக்குள் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காத்தான்குடி முதியோர் இல்லத்துக்கு சொந்தமான காணியினை யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்வது சம்பந்தமான விடயத்தில் சம்மேளனத்துடன் இணைந்து பொறியலாளர் சிப்லி பாறுக் இந்த காணியினை சுகாதார அமைச்சுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளரின் ஊடாக கையழித்திருந்தாக தெரிவித்தார்.

அந்த வகையில் இந்த அபிவிருத்திப்பணி துரித கெதியில் நடைபெறும் என்பதை இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களால் இச்சந்திப்பின் போது உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மாத்திரமல்லாமல் இன்று அவருடைய அமைச்சில் இது சம்பந்தமான முக்கிய கலந்துரையாடல் ஒன்று (CECB) நிறுவனத்திற்கும் அதேபோன்று கட்டட நிர்மான திணைக்களத்துக்கும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் இராஜாங்க அமைச்சர் தலையில் இடம் பெற்றது. 

இந்த வகையில் மிக விரைவாக இதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம் அதுமாத்திரமல்லாது காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு உரிய மின்தூக்கி ( LIFT ) அமைப்பது சம்பந்தமான அனைத்து விடயங்களும் அமுல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டிருக்கும் நிலையில் பாலமுனை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி சம்பந்தமாகவும் மிக விரைவாக அதனுடைய வேலைகளை ஆரம்பிக்க இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

மேலும் காத்தான்குடி தள வைத்தியசாலையில் மாகாண சபை காலத்தின் போது நாங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அமைக்கப்பட்டு வரும் மருந்து களஞ்சியசாலையை திறந்து வைப்பதுடன் அதேதினத்தில் மின்தூக்கி கட்டுமானத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வையும் செய்ய முடியும் என்பதை அமைச்சர் கூறியதுடன் மிக விரைவாக மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் ஏனைய தேவைப்பாடுகளை அறிந்து அனைத்து பிரதேசங்களினுடைய வைத்தியசாலை அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க இருப்பதாகவும் கூறினார்.

விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் பல அபிவிருத்திப் பணிகள் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட இருப்பதுடன் மேலும் சில அபிவிருத்திப் பணிகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளதாகவும் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
Attachments area


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7