LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, April 7, 2019

மோடி மீண்டும் பிரதமராக 63 சதவீதம் பேர் ஆதரவு – முக்கிய கருத்துக் கணிப்பில் தகவல்

மோடி மீண்டும் பிரதமராக 63 சதவீதம் பேர் ஆதரவு அளிப்பதாக நே‌ஷனல் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மத்தியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது பாரதீய ஜனதாவா? அல்லது காங்கிரசா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவுகிறது. இதுவரை வெளியான 2 முக்கிய கருத்து கணிப்புகள் மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது.

அந்த கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் செல்வாக்கு அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. ராகுலுடன் ஒப்பிடுகையில் மோடியே வலுவான, சிறந்த தலைவர் என்று பெரும்பாலான வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

யார் பிரதமராக வரவேண்டும் என்ற கேள்விக்கு சுமார் 63.4 சதவீதம் பேர் மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று கூறியுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் நஷனல் ட்ரஸ்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் மோடி பிரதமராக 52.8 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது குண்டு வீசிய பிறகு மோடிக்கு செல்வாக்கு 10 சதவீதம் அதிகரித்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. 26.9 சதவீதம் பேர் தான் ராகுல் பிரதமர் ஆக தகுதியுடையவர் என்று கூறியுள்ளனர்.

ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் தொடர்ந்து மாநில கட்சிகளுக்குத்தான் அதிக வரவேற்பு உள்ளது. இந்த மாநிலங்களில் ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்களிலும் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

தற்போதைய பிரதமர் மோடியின் செயற்திறன் மதிப்பீடு குறித்த கேள்விக்கு 45.4 சதவீதம் பேர் நன்று என்றும், 21.7 சதவீதம் பேர் பிரமாதம் என்றும், 19.3 சதவீதம் பேர் சராசரி என்றும், 9.6 சதவீதம் பேர் மோசம் என்றும், 3.9 சதவீதம் பேர் சுமார் என்றும் கூறியுள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7