ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் ரெக்சாஸ் மாகாணம், மேற்கு ஹூஸ்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று பயணித்தது.
இந்த விமானத்தை அதன் உரிமையாளரும், விமானியுமான ஜெப்ரே வெயிஸ் (வயது 65) இயக்கினார். அவருடன் விமானத்தில் மேலும் 5 பேர் பயணம் செய்தனர்.
விமானம் கெர்வில்லே நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நிலத்தில் வீழை்ந்து நொருங்கியது. இந்த கோர விபத்தில் விமானி உட்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன