காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதில் இருந்து ஏராளமான வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையம் முன்பாக வரிசையாக நின்று வாக்களித்து வருகின்றனர்.
பரபரப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் மாலை 4 மணி வரை நாகாலாந்தில் 68 சதவீதம், மேகாலயாவில் 55 சதவிீம், தெலுங்கானாவில் 48.9 சதவீதம், அசாமில் 59 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 58.86 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலுள்ள அனைத்து தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் முதற்கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.