பாங்கொக்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள, Bangkok’s Central World shopping mall இல் இன்று (புதன்கிழமை) திடீரென தீ ஏற்பட்டது.
சதுக்கத்தின் 8ஆவது மாடியில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் 3 உயிரிழந்ததோடு மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்ட தீயணைப்புத் துறையினர் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.