விமானப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 வாள்கள் கண்டெடுக்கப்பட்டது.
விமானப்படையினரால் கைப்பற்றப்பட்ட வாள்கள் அனைத்தும் சீனன் குடா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சீனன்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்