ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, காயமடைந்த சுமார் 500 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இலங்கை குண்டுத் தாக்குதல் – உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, காயமடைந்த சுமார் 500 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய நகரங்களிலுள்ள மூன்று தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகளில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.
அதன் பின்னரும் பல பகுதிகளில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன. இந்நிலையில், நாடெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று இரவு முதல் நாட்டில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.