பி.எஸ்.எல்.வி. சி-45 ரொக்கெட் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. முதன்முறையாக 3 புவிவட்டபாதையில் செயற்கைகோள்களை நிலை நிறுத்தி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், “ரொக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு செயற்கைக்கோள்கள் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. முதன்முறையாக மூன்று வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டது. ரொக்கெட்டின் நான்காவது நிலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு 485 கிலோமீற்றர் தூரத்தில் சோதனை முயற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நான்காவது நிலை சோதனை முயற்சியில் மூன்று முக்கிய செயற்கைகோள்கள் உள்ளன. இந்த ரொக்கெட் ஏவுதலை 1,200 பொதுமக்கள் நேரடியாக கண்டுகளித்தனர். அடுத்த ரொக்கெட் ஏவுதலை 5 ஆயிரம் பேர் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது மேலும் 10 ஆயிரமாக அதிகரிக்கும்.
அடுத்த மாதம் 2வது வாரத்துக்கு மேல் எட்டாம் வகுப்பு முடித்துள்ள 108 மாணவர்கள் இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்கு வரவுள்ளனர். அவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சியாக விண்வெளி தொழிநுட்பம், ரொக்கெட் தொழிநுட்பம், செயற்கைக்கோள்கள் என்பன குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் உருவாகவுள்ளனர். மே மாத நடுவில் பி.எஸ்.எல்.வி. சி-46, அடுத்து பி.எஸ்.எல்.வி. சி-47 மேலும் சந்திரயான்-2 ஆகிய திட்டங்கள் உள்ளன. இந்த வருடத்துக்குள் 30 விண்வெளி திட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார்.