டசாலைகளை இந்த ஆண்டில் மூடவுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தளவிலான பதிவு மற்றும் பாடசாலையை திறப்பதனால் ஏற்படும் அதிகளவிலான செலவுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளனர்.
அந்தவகையில் காபிலானோவின் ஆரம்ப பாடசாலையான புனித கேபிரியேல் கல்லூரி வரும் ஜூன் இறுதியில் மூடப்பட்டு அதில் கல்விகற்கும் மாணவர்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள உயர்தர பாடசாலைக்கு மாற்றுவதற்கு எட்மன்டன் கத்தோலிக்க பாடசாலை மாவட்ட குழு கூடி முடிவு செய்துள்ளது.
அத்தோடு 5540, 106th Ave பகுதியில் உள்ள செயின்ட் கேப்ரியல் கட்டிடத்தில் உள்ள ஹேசல்டனில் செயின்ட் மார்கரெட் பாடசாலை வரும் செப்டெம்பர் முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செயின்ட் மார்கரட் பாடசாலையில் 2018-19 ஆண்டு தொடக்கத்தில் 81 மாணவர்கள் இருந்தனர். குறித்த பாடசாலை மாணவர்களை இடம்மாற்றுவதற்காக மாற்றீடு கட்டடங்கள் எதுவும் முன்மொழியப்பட்டவில்லை என்பதால் தற்போது இவர்கள் அனைவரும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.