இந்த சுற்றிவளைப்புகளில் 10 ஆயிரத்து 170 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவதற்காக விசேட சுற்றிவளைப்புகள் நேற்று முதல் நாடாளவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.