வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வதற்கான தேர்தல் இதுவென பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலம், மங்களூருவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “இந்த முறை நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த பிரதமர் யார், அடுத்த ஆட்சியை எந்த கட்சி அமைப்பது, என்பதற்கான தேர்தல் அல்ல.
21ஆம் நூற்றாண்டில் புதிய இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதை நிர்ணயம் செய்வதற்கான தேர்தல்.
இந்த வாய்ப்பை நமது நாடு 20ஆம் நூற்றாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு அளித்திருந்தது. ஆனால், ஒரே குடும்பத்திடம் ஆட்சியை ஒப்படைத்ததன் மூலம் காங்கிரஸ் நாட்டை முன்னேற்றும் வாய்ப்பை இழந்துவிட்டது. காங்கிரஸின் கலப்படக் கூட்டணியால் நமது பாரம்பரியங்கள் சீரழிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும், பாதுகாப்பும் பலவீனமாகிப் போனது.
இந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி பரம்பரை ஆட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், நாங்கள் தேசியத்துக்கு முன்னுரிமை அளிக்கிறோம்” என்று மோடி தெரிவித்தார்.