குறித்த மீனவர்கள் நாளை (வியாழக்கிழமை) இரவு மாலைதீவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
21 மீனவர்களுக்கும் தேவையான பற்றுச்சீட்டு, உணவு உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.16 இலட்சம் வழங்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவு முக்கியஸ்தர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினையடுத்து, குறித்த மீனவர்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க முடிந்ததாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி 28 இல் அரபிக்கடலில் மீன்பிடித்து விட்டுத் திரும்பும் போது இரு படகுகள், பெருமளவிலான மீன்கள், உபகரணங்களுடன் மீனவர்கள் மற்றும் அரபிக்கடலில் இரு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பலரும் மாலைதீவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.