(தீபன்)
கிழக்கு மாகாண மீன்பிடி பிரிவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிராமசக்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள களுவங்கேணி கிராமத்தில் உள்ள " களுவங்கேணி மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு" 2019.04.09ம் திகதி மீனவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் , 127,305/= ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந் நிகழ்வு களுவங்கேணி கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி அலுவலகத்தின் மாவட்ட உத்தியோகத்தர் லோ.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண மீன்பிடி பணிப்பாளர் சி.சுதாகரன், மற்றும் மாவட்ட மீன்பிடி அலுவலகத்தின் நீரியல்வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.நேர்த்திராஜன், களுவங்கேணி கிராமத்தின் கிராமசேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்களத்தின் மீன்பிடி பரிசோதகர், மற்றும் சமூக பாதுகாப்பு சபை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு மீனவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கினையும், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உள்ளீடுகளை வழங்கி வைத்தனர்.