LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, April 1, 2019

கிழக்கு மாகாண கட்டத்தளபதி 2019 சவால் கிண்ணம் மட்டக்களப்பு வசம்



கிழக்கு மாகாண கட்டத்தளபதி சவால் கிண்ணம் 2019 ஆண்டுக்கான  வெற்றிக்  கிண்ணத்தை மட்டக்களப்பு உதைப்பந்தாட்ட கழகம்   சுவிகரித்துக்கொண்டது
   .

கிழக்கு மாகாண இராணுவத்தின் அனுசரணையில் கடந்த 10 ஆம் திகதி முதல் மட்டக்களப்பு ,காத்தான்குடி ,அம்பாறை ,கல்குடா , ஓட்டமாவடி ,கிண்ணியா ,திருகோணமலை , அக்கரைப்பற்று , ஆகிய உதைப்பந்தாட்ட கழகங்களில்   இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தில்  பதிவு செய்யப்பட உதைப்பந்தாட்ட கலகங்களை   உள்ளடக்கியதாக  லீக் முறையில் நடாத்தப்பட்ட கிழக்கு மாகான கட்டளைத் தளபதி சவால் கிண்ணம் 2019  உதைப்பந்தாட்ட   சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது

இறுதி போட்டிக்கு தெரிவான அம்பாறை உதைப்பந்தாட்ட கழக அணியும்  ,மட்டக்களப்பு உதைப்பந்தாட்ட கழக அணியும்  மோதிக்கொண்டன

நடைபெற்ற இறுதி போட்டி  நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக  கலந்துகொண்டார்

ஆரம்ப நிகழ்வாக அதிதிகளுக்கு விளையாட்டு வீரர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது 


அறிமுக நிகழ்வினை தொடர்ந்து போட்டி ஆரம்பமானது  இரு  அணிகளுக்கிடையில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஒன்றுக்கு  பூஜ்யம் என்ற  கோல் கணக்கில் மட்டக்களப்பு உதைப்பந்தாட்ட கழகம்   வெற்றிப்பெற்றது


வெற்றிப்பெற்ற மட்டக்களப்பு உதைப்பந்தாட்ட கழக அணி  கிழக்கு மாகாண கட்டத்தளபதி சவால் கிண்ணம் 2019  வெற்றிக்  கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது    .

கிழக்கு மாகாண இராணுவத்தின் அனுசரணையில் நடாத்தப்பட்ட  கிழக்கு மாகாண கட்டத்தளபதி சவால் கிண்ணம் 2019 ஆண்டுக்கான  உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இரண்டாம் இடத்தினை அம்பாறை  உதைப்பந்தாட்ட கழகமும் , மூன்றாம் இடத்தினை கிண்ணியா அம்பாறை  உதைப்பந்தாட்ட கழகமும் பெற்றுக்கொண்டது .

நடைபெற்ற இறுதி போட்டி நிகழ்வில் கிழக்கு மாகாண பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர , கிழக்கு மாகாண  ஆளுநர் எம் எல் எ எம் ஹிஸ்புல்லா, சமூக வலுவூட்டல் இராசாங்க அமைச்சர்  அலி சாஹிர் மௌலானா, மாவட்ட அரசாங்க அதிபர் .எம் உதயகுமார் , திருகோணமலை மறை மாவட்ட இமானுவேல் கிறிஸ்டியன் நோயல் ,மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்  ஜோசப் பொன்னையா , கோட்டமுனை பள்ளிவாசல் மௌலவி ஜே எம் . இலியாஸ் , மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் கிழக்கு மாகாண இராணுவ உயர் அதிகாரிகள் ,கலந்துகொண்டனர்







   

  



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7