ஒன்ராறியோவின் பிரவுன்ஸ்டவுனுக்கு அருகிலுள்ள கலபோகி சாலையில் இடம்பெற்ற குறித்த விபத்தில் பிரம்படன் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் உயிரிழந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆன் சேனாக் என்ற 62 வயதுடைய பெண்ணின் மீது குற்றம் சாட்டிய ஒன்ராறியோ பொலிஸார், அவர் மீது இரு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து (அலட்சியமாக வாகனத்தை செலுத்தியது, மரணத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை செலுத்துதல்) வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தின்போது வாகனத்தை செலுத்தியவர் குடிபோதையில் இருந்ததையும் தற்போது பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி குறித்த பெண்ணை ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.