ய தாயை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரொறன்ரோ கிங் மற்றும் பே வீதிகளுக்கு அருகே நிலத்தடி நடைபாதை, அருகே, கடந்த 10ஆம் திகதி குறித்த சிறுவன் தனது 51 வயதான தாயை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து, சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய், சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எனினும் குறித்த சிறுவன், தனது தாயை என்ன காரணத்திற்காக கொலை செய்தார் என்பதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இதனால் இச்சிறுவனை கைதுசெய்துள்ள பொலிஸார், அவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள், உடனடியாக தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.