ல் இல்லாத அதிகூடிய வெப்பநிலைக்கு இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பௌதீகவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பூகோள வெப்ப மயமாதல் மற்றும் எல்னினோ காலநிலையின் தாக்கம் ஆகியவையே இந்த வழமைக்கு மாறான வெப்பநிலைக்குக் காரணம் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நிலை தொடரும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை, மன்னார், வவுனியா, மொனராகல, முல்லைத்தீவு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுடன் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு மற்றுமொரு வெப்பநிலை எச்சரிக்கையை வானிலை அவதான நிலையம் நேற்று விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.