க்டர் அம்பேத்கரின் 128 ஆவது பிறந்தநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.
டெல்லியிலுள்ள நாடாளுமன்ற புல்வெளியிலுள்ள அம்பேத்கரின் சிலையின் முன்னே வைக்கப்பட்டுள்ள அவரது ஒளிபடத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும், தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தமிழ் நாட்டின் தலைவர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அதேபோன்று ஏனைய மாநிலங்களிலுள்ள அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாடியதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் அம்பேத்கரின் 128 ஆவது பிறந்த நாள் குறித்து தெரிவித்துள்ளதாவது, “நமது நாட்டின் தனிப்பெரும் அடையாளமாக திகழும் நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர், சாதிகளற்ற, பாகுபாடுகளற்ற நவீன இந்தியாவை உருவாக்கவும், பெண்கள் மற்றும் நலிந்த மக்களுக்கான சம உரிமைகளை பெற்றுகொடுக்க தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர். அவரது பிறந்தநாளன்று எனது மரியாதையை செலுத்துகிறேன்” என ராம்நாத் கோவிந்த் பதிவேற்றியுள்ளார்.