சிலாபம் பிரதேசத்தில் புதுவருடக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பயணித்தவர்களின் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதிலேயே அவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பொலிஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்த புது வருடக் கொண்டாடத்தில் பங்குபற்றிவிட்டு வீடு செல்வதற்கு பேருந்தில் கண்பார்வையற்ற 11 பேரும் பயணிக்கவிருந்த நிலையில், நிகழ்வு இடம்பெற்ற விடுதியின் மதில் மற்றும் பெயர் பலகையின் ஹொங்கீரிட் தூணுடன் பேருந்து மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.