ரொறன்ரோ பெரும்பாகத்தின் போக்குவரத்து மேம்பாட்டுக்காக ஒன்ராறியோ மாநில அரசாங்கம் சுமார் 30 பில்லியன் டொலர்களை வழங்கும் என கடந்த செவ்வாய்க்கிழமை பேர்ளிங்டனில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இது குறித்த தகவலை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் வெளியிட்டுள்ள போதிலும், அந்த திட்டங்களுக்கான காலப் பகுதி உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மக்கள் செல்வதற்கான திட்டத்திற்காக 28.5 மில்லியன் டொலர்களை முதலிடவுள்ளதாகவும், இதற்குள நெடுஞ்சாலைகளும் உள்ளடங்கும் என்றும், குயீன் எலிசபெத் வே, கார்டினர் அதி விரைவுச் சாலை, நெடுஞ்சாலை 401 உள்ளிட்டவை குறித்தும் தாம் சிறந்த திட்டங்களை வைத்துள்ளதாகவும் அவர் இதன்பேது குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது அதன் முதற்கட்டமாக 11 பில்லியன் டொலர்களை 4 புதிய பிரதான போக்குவரத்து மேம்பாட்டுக்காக ஒன்ராறியோ மாநில அரசாங்கம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.