அவ்வகையில், பெண் ஒருவா், இரு சிறுவர்கள் உள்ளிட்ட பதினொரு பேரையும் நாளை (புதன்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிபதி அனுர இந்திரஜித் புத்ததாச நேற்று மாலை உத்தரவிட்டார்.
இரகசியமாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து நேற்று மதியம் வாகனத்தில் உடப்பிற்குச் சென்று கொண்டிருந்த போதே இவர்கள் பதினொரு பேரும் புத்தளம் நகரில் வைத்து புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பெண் ஒருவரும், பத்து வயதுச் சிறுவன் மற்றும் 12 வயது சிறுமி ஆகியோருடன் மேலும் 26 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட எட்டுப் பேருமாக பதினொரு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
இதன்போது இவர்கள் பயணித்த வாகனத்திலிருந்து பயணத்திற்குத் தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விடயத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதோடு இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.