LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 4, 2019

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் – முன்னாள் கடற்படைத் தளபதியிடம் 8 மணி நேர விசாரணை

சுமார் 8 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

நான்காவது தடவையாக அவர் (வியாழக்கிழமை) காலை வாக்கு மூலம் ஒன்றை வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து அட்மிரல் வசந்த கரன்னகொட மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதன்படி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை கைது செய்வதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது

இதனை அடுத்து அவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்றுடன் 4 ஆவது  தடவையாக  வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7