இதன்படி எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் ஆணையகத்தில் முன்னிலையாகுமாறு குறித்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்கு, மருத்துவக்குழு அமைத்தால் மாத்திரமே ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு வைத்தியர்கள் முன்னிலையாவார்களென அப்பல்லோ வைத்தியசாலையின் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கின் மனு மீதான விசாரணை இன்று (சனிக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோ வைத்தியர்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தடையில்லை என உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்தே ஆறுமுகசாமி ஆணையகம், அப்பலோ வைத்தியர்களுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.