ய்வதற்கும் வீடற்றவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான டொலர்களை ஒதுக்கவுள்ளதாக டக் ஃபோர்ட் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் இந்த வருடம் குறித்த பணம் செலவழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு நகராட்சி பெறும் நிதிகளின் அளவு தொடர்பாக இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை.
மேலும் ஒன்ராறியோவில் இருக்கும் குடும்பங்கள் உடைந்த கட்டிடங்கள் மற்றும் உடைந்த மின்தூக்கிகளை பயன்படுத்துவதை தமது அரசாங்கம் விரும்பவில்லை என நகராட்சி அலுவல்கள் அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒன்ராறியோவில் மலிவு வீட்டு வசதிகளை சரிசெய்வதற்கும் வீடற்றவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் ஒரு பில்லியன் ரூபாய் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.