(ஜெ.ஜெய்ஷிகன்)
சனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' எனும் தொனிப் பொருளில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களமும் இணைந்து 08ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை பல்வேறு விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
சனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' எனும் தொனிப் பொருளில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களமும் இணைந்து 08ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை பல்வேறு விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
08ஆம் திகதி கல்குடா வலயத்திற்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் உள்வாங்கல் கல்வியை அமுல்படுத்தும் நோக்கிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 02வது விசேட அலகு பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் அவர்களால்
சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாடசாலையின்
அதிபர் இதயன், சமூகசேவைத்திணைக்கள உத்தியோகத்தர்களான திருமதி.சிராணி
சிவநாயகம், க.ஜெகதீஸ்வரன், திருமதி.சந்திரகுமாரன்,சமூக பராமரிப்பு நிலைய
உத்தியோகத்தர்கள், கிராமசேவகர்களான ஜெ.லோபனராஜ், கே.காந்தன், பிரபு
அரியநாயகம், மற்றும் புகலிடம் நிறுவனத்தைச் சேர்ந்த இணைப்பாளர் சுகன்யா,
மற்றும் கள உத்தியோகத்தர் சஞ்சீவ், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர்
சண்முகம் சஜேந்திரன், அமைப்பின் பிரதிநிதிகள் மாற்றுத்திறனாளி மாணவர்கள்,
பெற்றார்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கறுவாக்கேணி கிராமசேவகர் பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கல் உற்பத்தி நிலையம் சனாதிபதியின் விசேட செயற்றிட்டத்தின் கீழ் பிரதேசசெயலாளர் திரு.வன்னியசிங்கம் வாசுதேவன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சமூகசேவைத் திணைக்கள சமூக பராமரிப்பு நிலையத்தில் பயன்தரும் பழ மரக்கன்றுகள் நடப்பட்டன. சனாதிபதியின் விசேட செயற்றிட்டத்தின் கீழ் பிரதேசசெயலாளர் திரு.வன்னியசிங்கம் வாசுதேவன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக வாழைமரம் நட்டு வைக்கப்பட்டது.
சமூகசேவைத் திணைக்கள சமூக பராமரிப்பு நிலையத்தில் முதியோர்களின் கலை, கலாசார, பண்பாட்டு, ஆடல், பாடல்களை மேற்கொள்வதற்காக ஒரு தொகுதி இசைக்கருவிகள் பிரதேசசெயலாளர் திரு.வன்னியசிங்கம் வாசுதேவன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக முதியோர் சங்கப் பிரதிநிதிகளிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.