‘Scotty’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த டைனோசரின் தொல்படிமம் 1991ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
டைனோசரின் எலும்புகள் மீது படிந்திருந்த மணற்கல்லை அகற்றி அதற்கு முழு வடிவம் கொடுக்கும் பணி, சில ஆண்டுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும் இதுவரை அதன் உண்மையான அளவை ஆய்வாளர்களால் தீர்மானிக்க முடியவில்லை.
‘Scotty’ 13 மீட்டர் நீளமும் 8,800 கிலோகிராம் எடையும் கொண்ட மாபெரும் உயிரினம் என்பது இப்போது தெளிவாகியுள்ளதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
இதன்மூலம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இறைச்சி உண்ணும் டைனோசர்களில் இதுவே மிகப்பெரியது என்பது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அளவில் மட்டுமல்ல, ‘Scotty’ டைனோசரின் வயதும் அதற்குச் சிறப்பு சேர்க்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதேவேளை, மே மாதத்திலிருந்து ‘Scotty’ இன் முழுமையான தொல்படிமம், Royal Saskatchewan அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.